.
அப்போது பத்திரிகையாளர்கள், நடிகை திரிஷாவிடம்,நடிகர் விஜய் குறித்தான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பிய போது, திரிஷா எந்த பதிலும் அளிக்காமல், மவுனமாக விறுவிறு என்று நடந்து, விமான நிலையத்தின் உள்ளே சென்று விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவரும் நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது கணவர் விஜயுடன் தான் சேர்ந்து வாழ விரும்பவில்லை எனவும், எனவே விவாகரத்து வழங்க வேண்டும் எனக் கூறி அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மேலும் கடந்த நான்காண்டுகளாக நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும் அதனை தான் கண்டித்த பிறகும் மீண்டும் அந்த நடிகை உடன் அவர் தொடர்பில் இருந்து வருகிறார் எனவும் அந்த மனுவில் அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் சென்னை திருவான்மையூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டது சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறி,
சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில் தான் மும்பை செல்வதற்காக இன்று, சென்னை விமான நிலையம் வந்திருந்த நடிகை திரிஷாவிடம், இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எ
ழுப்பிய போது, அவர் மவுனமாக சென்றது குறிப்பிடத்தக்கது.