நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் “சொல்லிவிடவா” படத்தைத் தனது ஸ்ரீ ராம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இளமை ததும்பும் காதல், கலர்புல் காமெடி, அனல்பரக்கும் ஆக்ஷ்ன், சுவாரஸ்யமான திருப்பங்கள் என அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடியக் கலவைகளை உள்ளடக்கி உருவாகியுள்ள “சொல்லிவிடவா” திரைப்படத்தில் இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். நடிகர் சந்தன் முதன்முறையாகத் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், “மொட்டை” ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்ட பணிகளை நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.