அமலாபாலின் துணிகர முயற்சி!

அமலாபாலின் அதிரடி வேடங்கள் பல நடிகைகளை அதிர வைத்திருக்கின்றன. “என்ன இந்த பொண்ணு இப்படி பயமுறுத்துறாளே,விட்டா தூக்கி அடிச்சாலும் அடிச்சிருவா போலிருக்கே “என அஞ்சியவர்களும் இருக்கிறார்கள். 

அவரின்  அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருந்தன. தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது.

இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட.

அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார்.

இந்திய சினிமாவில் ஒருநடிகை  தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல்  தடயவியல் புலனாய்வு திரில்லர் படம் இது தான்.

ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை.

மேலும், இந்த படம் கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் பி. உமாதத்தன்  கையாண்ட ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அனூப் பணிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகிய இருவரும் அவருடன் 6 மாதங்கள்  கலந்துரையாடி கதையை எழுதியிருக்கின்றனர். தடய அறுவை மருத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள பல மருத்துவ கல்லூரிகளையும் கூட இந்த இருவரும் பார்வையிட்டனர்.
சுவாரஸ்யமாக, ‘ராட்சசன்’ படத்தின் படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், சண்டைப்பயிற்சியாளர் என ஏறக்குறைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் பணியாற்ற பிரபல நடிகர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது விரைவில் இறுதி செய்யப்படும். ஏ.ஜே. ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019ல் தொடங்குகிறது.
அமலாபால்ஏ ஜெ பிலிம்ஸ்