“திறனில்லாத தலைவர் ராகுல்!”-நடிகர் சித்தார்த் அட்டாக்!

மல்யுத்தப் போட்டியில் மண்ணைக்கவ்விய பயில்வானைப்  பற்றி நோஞ்சான்கள் நையாண்டி பண்ணுவது மாதிரிதான்  இதுவும் என்று சொல்லி விடலாமா? 

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி பற்றி பலவிதமான கமெண்ட்ஸ்.! 

இருந்தாலும் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்று வனவாசம் போனாலும் “பகவானின் ” சப்போர்ட் தர்மன் பிரதர்சுக்குத்தானே  இருந்தது என காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

வெற்றி விழா படங்களை மட்டுமே கொடுத்து வருகிற நடிகர் சித்தார்த் தனது கருத்துகளை சொல்லி இருக்கிறார்.

  1. டெல்லி டேர்டெவில்ஸ் அணி தங்கள் பெயரை மாற்றிக்கொண்டதைப் போல காங்கிரஸ் கட்சியும் பெயர் மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்.
  2. திறனில்லாத தலைவர் தலைமையில் அதிக தோல்விகள்.
  3. கட்சியில் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமான லட்சியங்கள்.
  4. சுதந்திர இந்தியாவின் மூத்த கட்சி கவலைக்கிடம்.

மேற்கண்டவாறு சித்தார்த் சொல்லியிருக்கிறார்.

காங்.கட்சிசித்தார்த்