என்.ஜி.கே. பல ரகசியங்கள். கேரக்டர்கள். செல்வராகவன் உற்சாகம்.!

எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு,எஸ்,ஆர்.பிரபு, தயாரித்து ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டிருக்கிற என்.ஜி.கே .படம் நேற்று முதல்  அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக செல்வராகவன் படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் வருவது வழக்கம்தான்.

இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

“அமோகமான ஆதரவு.அளப்பரிய அன்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் சிலர் யூகம் செய்ததைப்போல என்.ஜி.கே.படத்தின் கதாபாத்திரங்களில் பல ரகசியங்கள் மறைந்திருக்கின்றன. 

படத்தை கவனமுடன் பார்த்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம். குடும்பத்துடன் சென்று பாருங்கள். நண்பர்களுடன் சேர்ந்து ரசியுங்கள்”என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

என்.ஜி.கே.சூர்யாசெல்வராகவன்