பிரபாஸ்,அனுஷ்கா வதந்திக்கு முற்றுப் புள்ளி!

பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ்,அனுஷ்கா காதல் கல்யாண சேதிக்கு  வலு  கூடி விட்டது. 

இருவருமே  சராசரி கல்யாண வயதைத் தாண்டிவிட்டவர்கள்தான். 

இருவரும் ஒன்றாக சுற்றுவார்கள். விருந்துகளில் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனாலும் காதல் செய்தியை பிரபாஸ் கடுமையாக மறுத்து விடுவார்.

நிருபர்களுக்கு அதை கேட்டு கேட்டு அலுத்து விட்டது. ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. தலைப்பு செய்தி தேவைப்படுதே!

வருடக்கணக்கில் ஓடிக்கொண்டிருக்கிற இந்த செய்திக்கு எப்படிதான்  முடிவு கட்டுவது?

அதற்கு பிரபாஸே  ஒரு நல்ல ஐடியாவை சொல்லியிருக்கிறார்.

“நானும் அனுஷ்காவும் 11 ஆண்டுகளாக நல்ல நண்பர்கள். இன்றும் நல்ல நண்பர்கள்தான் ஆனால் இருவர்க்கும்  கல்யாணம் என்பது முடிவடையாத வதந்தி. இந்த வதந்திக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது?

எங்களில் யாராவது ஒருவர்க்கு முதலில் கல்யாணம் நடப்பதுதான் நல்லது.அப்போதுதான் அந்த கல்யாண வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கமுடியும். விரைவில் எனது கல்யாண செய்தியை எதிர்பார்க்கலாம்.”என்கிறார்.

அனுஷ்காகாதல் கல்யாணம்பிரபாஸ்