
பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ்,அனுஷ்கா காதல் கல்யாண சேதிக்கு வலு கூடி விட்டது.
இருவருமே சராசரி கல்யாண வயதைத் தாண்டிவிட்டவர்கள்தான்.
இருவரும் ஒன்றாக சுற்றுவார்கள். விருந்துகளில் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனாலும் காதல் செய்தியை பிரபாஸ் கடுமையாக மறுத்து விடுவார்.
நிருபர்களுக்கு அதை கேட்டு கேட்டு அலுத்து விட்டது. ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. தலைப்பு செய்தி தேவைப்படுதே!
வருடக்கணக்கில் ஓடிக்கொண்டிருக்கிற இந்த செய்திக்கு எப்படிதான் முடிவு கட்டுவது?
அதற்கு பிரபாஸே ஒரு நல்ல ஐடியாவை சொல்லியிருக்கிறார்.












