விஜயசாந்தியின் ரீ என்ட்ரி…….”மாமூலான கேரக்டர்களுடன் வராதே”

வயது 54 என்றாலும் இன்னும் இளமை இளைக்கவில்லை .சினிமாவில் இவருக்கென தனி ஆசனம். இளைய நடிகைகள் இவரளவுக்கு அழகுடன் இல்லை என்பது உண்மை.

13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயசாந்தி நடித்து வெளிவருகிற முதல் படம் ‘சரிலேறு நீகேவரு ‘ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அப்போதுதான் மலர்ந்ததை போல அழகாக இருக்கும் இவர் அடுத்த படத்துக்கான வாய்ப்புகளை வரிசைப் படுத்தவில்லை. மாறாக இரண்டு நிபந்தனைகள்.!

“சம்பளத்தை குறைத் துக் கொள்ள மாட்டேன்.”-இது முதலாவது கண்டிஷன்.

அடுத்தது “வழக்கமான அம்மா,அக்கா கேரக்டர்களுடன் வராதீர்கள். வித்தியாசமாக, எனக்கு முக்கியம் தருகிற கதைகளுடன் வாருங்கள்.நடிக்கிறேன் “என்று சொல்லி இருக்கிறார்.

 

இரண்டு நிபந்தனைவிஜயசாந்தி