
வயது 54 என்றாலும் இன்னும் இளமை இளைக்கவில்லை .சினிமாவில் இவருக்கென தனி ஆசனம். இளைய நடிகைகள் இவரளவுக்கு அழகுடன் இல்லை என்பது உண்மை.
13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயசாந்தி நடித்து வெளிவருகிற முதல் படம் ‘சரிலேறு நீகேவரு ‘ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அப்போதுதான் மலர்ந்ததை போல அழகாக இருக்கும் இவர் அடுத்த படத்துக்கான வாய்ப்புகளை வரிசைப் படுத்தவில்லை. மாறாக இரண்டு நிபந்தனைகள்.!
“சம்பளத்தை குறைத் துக் கொள்ள மாட்டேன்.”-இது முதலாவது கண்டிஷன்.
அடுத்தது “வழக்கமான அம்மா,அக்கா கேரக்டர்களுடன் வராதீர்கள். வித்தியாசமாக, எனக்கு முக்கியம் தருகிற கதைகளுடன் வாருங்கள்.நடிக்கிறேன் “என்று சொல்லி இருக்கிறார்.












