சீறுகிற நாகம் ஆனார் டி. ராஜேந்தர்.! “கண்ணீர் வடிக்கிறார்களய்யா!”

ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோரின் வீடுகளை முற்றுகை இட்டும் முயற்சி வெற்றிபெறாத விநியோகஸ்தர்கள் மனம் தளராமல் அடுத்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். தர்பார் படத்தை ஏரியா வீதம் வாங்கியவர்களில் காளியப்பன் ( செங்கல்பட்டு ) சிவா (கோவை ) பிரவீன் (மதுரை ) கார்த்திகேயன் (திருச்சி ) கண்ணன் (நெல்லை ) ஜோன்ஸ் (சேலம்) திருவேங்கடம் ( ஆற்காடு மாவட்டங்கள் ) ஆகியோர் முக்கியமானவர்கள். 

அண்மையில் விநியோகஸ்தர்கள் அமைப்புக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் டி .ராஜேந்தர்.

இவரிடம் கடைசி நம்பிக்கை வைத்து விநியோகஸ்தர்கள் முறையிட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்.

இவர் தயாரிப்பாளராகவும் இருப்பவர். முன்னணி நடிகரான சிம்புவுக்கு அப்பா. உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு நண்பர்.

இவரால் என்ன செய்ய முடியும் என்கிற கேள்வி எழாமல் இல்லை. 

நட்டப்பட்டதாக சொல்கிற விநியோகஸ்தர்களுக்கு யாரிடம் இருந்து இழப்பீடு வாங்கித் தருவார்? 

லைகா நிறுவனம் மதுரை அன்புச்செழியனிடம் இருந்து கடன் வாங்கி இருப்பதாக அண்மையில் நடந்த ஐ.டி .ரெய்டு வழியாக தெரிய வந்திருக்கிறது. இதனால் லைகாவிடம் இழப்பீடு கேட்க முடியுமா?

படத்தயாரிப்பில் 70 சதவீதம் ரஜினி ,முருகதாஸுக்கு கொடுக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா பொய்யா என்பதையும் பார்த்து விட்டுத்தான் அவர்கள் வீட்டுக் கதவை தட்ட முடியும். என்ன செய்யப்போகிறார் டி. ஆர்.

எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறார் ராஜேந்தர்.!

இன்று அவர் பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசும்போது ” நட்டம் அடைந்திருப்பதாக விநியோகஸ்தர்கள் சொல்லுகிறார்கள்.அதை ஆராய்ந்து பார்க்காமல் கருத்து சொல்ல முடியாது.

ஆனால் சிலர் என்ன நட்டம் என்பதை புரிந்து கொள்ளாமல் ,விநியோகஸ்தர்கள் மாயையை உருவாக்குகிறார்கள் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வசூல் எவ்வளவு என்பதை விசாரித்துப் பாருங்கள்.

பாதிப்பு அடையாமலா அத்தனை பேரும் நட்டப்பட்டிருக்கிறோம் என்று சொல்வார்கள்?அவர்கள் நடிப்பதற்காக வந்தவர்கள் அல்லர். கஷ்டப்படுகிறார்கள், கண்ணீர் வடிக்கிறார்கள்.

ரஜினியும் எனக்கு நண்பர் .ஆகவே இந்த பிரச்னையை கவனமாக கையாள வேண்டியதிருக்கிறது”என்று சொல்லுகிறார் ராஜேந்தர்.

டி.ராஜேந்தர்தர்பார் நட்ட பிரச்னைரஜினிகாந்த்விநியோகஸ்தர்கள்