சூது கவ்வும் பார்ட் 2 .தயாராகிறதா?விஜய்சேதுபதி நடிப்பாரா?

அட்டகத்தி, பீட்சா,தெகிடி, இன்று நேற்று நாளை,முண்டாசுப்பட்டி ,இறுதிச்சுற்று,காதலும் கடந்துபோகும்  உள்ளிட பல படங்களை  திருகுமரன் எண்டர்பிரைஸ் படநிறுவனம் சார்பில் தயாரித்துள்ளவர் சிவி.குமார்.

தற்போது  டைட்டானிக்   காதலும் கவுந்து போகும்,4ஜி ஆகிய படங்களை தயாரித்து  வருகிறார்.

சிவி.குமார் தனது நிறுவன  சமூகவலைதளபக்கத்தில்,   ‘எனது தயாரிப்பில் வெளியான படங்களில்   உங்களுக்கு எந்த படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்று கேட்டு பதிவிட்டிருக்கிறார்

அதில் , சூதுகவ்வும் ,தெகிடி மற்றும் மாயவன் ஆகிய மூன்று படங்களின் பெயர்கள் இருந்தன. .இதில் அதிகபடியான ரசிகர்கள் ‘சூதுகவ்வும்’ படத்தையே தேர்வு செய்துள்ளனர்.இந்தபடத்தில் மக்கள்செல்வன்விஜய்சேதுபதி,சஞ்சிதாஷெட்டி,அசோக்செல்வன்,கருணாகரன்ஆகியோர்நடித்திருந்தனர்.

 இது குறித்து சூதுகவ்வும் பட இயக்குனர் நலன் குமாரசாமியிடம் கேட்டபோது, “ஆம். நான் இரண்டு ஸ்கிரிப்ட்களை முடித்துவிட்டேன், ஒன்று தமிழ் சினிமாவில் உள்ள அதிரடி-மசாலா வகை அடுத்தது,ஸ்போர்ட்ஸ் பட வகையைச் சேர்ந்தது என்றவரிடம்,.  சூது கவ்வும் 2ம் பாகம் குறித்து கேட்டபோது, எதிர்காலத்தில் நடக்கும் என நம்புகிறேன் என்கிறார்.விரைவில் சூதுகவ்வும் 2ம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத்தெரிகிறது

சி.வி.குமார்சூதுகவ்வும்நலன்குமாரசாமிவிஜய்சேதுபதி