“ரஜினி! அரசியலை விட்டு தள்ளி நில்லுங்கள்!” -மீரா மிதுனின் அத்துமீறல் அறிக்கை!!

கெட்டவார்த்தைகளின் ஊற்றுக்கண்களை திறந்து விட்டவர் மாடல் மீரா மிதுன். 

குறுக்கு வழியில் பிரபலமடைவதற்கு சிலர் உச்சத்தில் இருக்கிறவர்களை வம்புக்கு இழுப்பார்கள் .அதை ஊடகங்களும் பெரிது படுத்தும். இதனால் அவர்கள் பேசுபொருளாகிவிடுவார்கள்.

அப்படி பேசு பொருளாக மாறியவர்தான் மீரா மிதுன் .பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை அறிமுகப்படுத்தியது. வனிதாவையும் இதே நிகழ்ச்சிதான் பிரபலப்படுத்தியது.

 எடப்பாடியை டிஸ்மிஸ் பண்ணிவிட்டு தன்னை முதல்மந்திரியாக நியமிக்கும்படி பிரதமர் மோடிக்கு டிவிட்டை டேக் பண்ணத் தொடங்கி அடுத்தடுத்து உலகநாயகன்  கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களை வம்புக்கு இழுத்து விட்டுக்  கொண்டிருக்கிறார். 

அண்மையில் தளபதி விஜய் ,சூர்யா ஆகியோரையும் அவர்களது குடும்பத்தையும் வம்புக்கு இழுத்தார் .இதனால் அவர்களது பலமிகுந்த ரசிகர்கள் பட்டாளம் மீராவை வறுத்து எடுக்கத்தொடங்கியது. இந்த நிலையில்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலையிட்டு  அமைதியை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஊ….கும் ! ஒன்னும் நடக்கல ! இதற்கெல்லாமா மீராமீதுன் அடங்குவார் என்றுதான் பேசத்தொடங்கிவிட்டார்கள். அவருக்கு அரசு ,காவல்துறை ஆகிய இரண்டிலும் வேண்டிய நண்பர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தகைய ஆதரவு இருக்கிறபோது மீரா மிதுனால் எப்படி சும்மா இருக்க முடியும்?

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து மீராமீதுன் விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இமயம் எங்கே ,இந்த துணி துவைக்கும் கல் எங்கே?
கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனை விட சாக்கடையில் புரளுகிற பிராணி தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டால் ? 
ரஜினிகாந்த் குறித்து மீராமீதுன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
“45 வருடங்களில் ரஜினிகாந்த் நிறைய சாதித்துள்ளார். ஒரு கண்டக்டராக இருந்து பெரிய சாதனை நடிகராக உயர்ந்துள்ளார். அதில் சந்தேகமில்லை.ஆனால் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற அவரது அரசியல் ஆசை கனவாகவே போகும்.54 வருடங்களாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தமிழகத்திற்கு சரியான பாதையை காட்டியுள்ளது. எனவே தள்ளி நில்லுங்கள் ரஜினி என பதிவிட்டுள்ளார்.
இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொறி சிரங்கு பிடித்தவனுக்கு படை நோயும் வந்து விட்டால்?
சூப்பர்ஸ்டார்மீரா மிதுன்ரஜினிகாந்த்