கெட்டவார்த்தைகளின் ஊற்றுக்கண்களை திறந்து விட்டவர் மாடல் மீரா மிதுன்.
குறுக்கு வழியில் பிரபலமடைவதற்கு சிலர் உச்சத்தில் இருக்கிறவர்களை வம்புக்கு இழுப்பார்கள் .அதை ஊடகங்களும் பெரிது படுத்தும். இதனால் அவர்கள் பேசுபொருளாகிவிடுவார்கள்.
அப்படி பேசு பொருளாக மாறியவர்தான் மீரா மிதுன் .பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை அறிமுகப்படுத்தியது. வனிதாவையும் இதே நிகழ்ச்சிதான் பிரபலப்படுத்தியது.
எடப்பாடியை டிஸ்மிஸ் பண்ணிவிட்டு தன்னை முதல்மந்திரியாக நியமிக்கும்படி பிரதமர் மோடிக்கு டிவிட்டை டேக் பண்ணத் தொடங்கி அடுத்தடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களை வம்புக்கு இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் தளபதி விஜய் ,சூர்யா ஆகியோரையும் அவர்களது குடும்பத்தையும் வம்புக்கு இழுத்தார் .இதனால் அவர்களது பலமிகுந்த ரசிகர்கள் பட்டாளம் மீராவை வறுத்து எடுக்கத்தொடங்கியது. இந்த நிலையில்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலையிட்டு அமைதியை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஊ….கும் ! ஒன்னும் நடக்கல ! இதற்கெல்லாமா மீராமீதுன் அடங்குவார் என்றுதான் பேசத்தொடங்கிவிட்டார்கள். அவருக்கு அரசு ,காவல்துறை ஆகிய இரண்டிலும் வேண்டிய நண்பர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தகைய ஆதரவு இருக்கிறபோது மீரா மிதுனால் எப்படி சும்மா இருக்க முடியும்?