Friday, November 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

admin by admin
November 6, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் கணவன், மனைவி, வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் தெரியாத அந்நியர்களைப் போல நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்னவாகும்? இந்தச் சுவாரஸ்யமான கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதிலுடன் ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய தமிழ் ஒரிஜினல் தொடரான ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடரை அறிமுகப்படுத்துகிறது.

இந்தத் தொடர் நவம்பர் 18 ஆம் தேதி முதல் வெளியாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு புதிய எபிசோடுகள் வெளியாகும்.

You might also like

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

கார்ப்பரேட் அலுவலகப் பின்னணியில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கப் போராடும் இளம் தம்பதியான அறிவு மற்றும் ஐஸ்வர்யாவைச் சுற்றி நகர்கிறது. இருவருக்கும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் கடுமையான விதிமுறையின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் பணிபுரியக் கூடாது. இதனால் தங்களது வேலையையும் பொருளாதார நிலையையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், தங்களது திருமண உறவை மறைத்து, அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் போல நடந்துகொள்ள இருவரும் முடிவு செய்கின்றனர்.

இதற்குப் பிறகு ஆபிஸ் மீட்டிங்ஸ், காபி பிரேக்ஸ், சக ஊழியர்களுடனான உரையாடல்கள் என ஒவ்வொரு தருணத்திலும் அவர்களது ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பதற்றம் உருவாகிறது. கண்டிப்பான மேலாளரைச் சமாளிப்பது முதல் ஆர்வத்துடன் கேள்வி கேட்கும் சக ஊழியர்களை எதிர்கொள்வது வரை, தங்களது திருமண வாழ்க்கையை மறைப்பதற்காகத் தொடர்ந்து புதுப்புது பொய்களைக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நகைச்சுவைக்கு மத்தியில், இன்றைய சூழலில் பணிபுரியும் இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கையின் அன்றாட யதார்த்தங்களையும் இந்தத் தொடர் பேசுகிறது.

இந்தத் தொடரில் பிரதீப் ஆண்டனி மற்றும் ஸ்மேஹா மணிமேகலை ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களான அறிவு மற்றும் ஐஸ்வர்யாவாக நடித்துள்ளனர். இவர்களுடன் திரைப்படங்களில் நடித்ததன் மூலமும், பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமான சனம் ஷெட்டி மற்றும் ‘தடம்’, ‘கலகத் தலைவன்’, ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் தொடர் குறித்து நடிகர் பிரதீப் ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது, “திருமணமானதை அலுவலகத்தில் மறைப்பது சாதாரண விஷயம்  இல்லை. அப்படி மறைக்கும்போது என்னவாகும் என்பதை நகைச்சுவை கலந்து காட்ட இருக்கிறது  ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர். ஒரு நல்ல கணவராக இருப்பதற்கும், அலுவலகத்தில் அந்நியரைப் போல நடிப்பதற்கும் இடையில் அறிவு தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு சூழலையும் கட்டுப்படுத்த அவர் முயற்சிக்கும்போதெல்லாம் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

அலுவலக வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் தங்களை இதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். இந்தத் தம்பதி தங்களது ரகசியத்தை எப்படிக் காப்பாற்றப் போராடுகிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை ஸ்மேஹா மணிமேகலை பகிர்ந்து கொண்டதாவது, “திருமணமானவர்கள் பெரும்பாலும் வீட்டிலும் வெளியிலும் வெவ்வேறு விதமாக நடந்துகொள்வார்கள். ஆனால், அலுவலகத்தில் தங்களது கணவரையே தெரியாது என்று நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? ஐஸ்வர்யா தனது உறவு, வேலை மற்றும் எப்போது ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் என அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இதில் வரும் சூழல்கள் சிரிப்பை ஏற்படுத்தினாலும், இணைந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கப் போராடும் இருவரின் உண்மையான கதையும் இதில் இருக்கிறது” என்றார்.

நடிகை சனம் ஷெட்டி, “திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருப்பதால், இந்தத் தொடரின் கார்ப்பரேட் பின்னணியையும் அலுவலக வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளையும் உடனடியாக என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. ஆபிஸ் மீட்டிங்ஸ், அரசியல், சக ஊழியர்கள் மற்றும் எதிர்பாராத சூழல்கள் என அனைத்துமே எனக்கு மிகவும் பரிச்சயமானவை. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த அனுபவங்களை நகைச்சுவையான சூழல்களாக மாற்றியிருப்பதுதான் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடரின் சிறப்பு. பார்வையாளர்கள் ரசிப்பதுடன் தங்களையும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய புதுமையான நகைச்சுவைத் தொடர் இது” என்றார்.

சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மகிழ் திருமேனி பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு சூழலில் இருந்து இயல்பாக உருவாகும் நகைச்சுவை மிகவும் இயல்பாக இருக்கும். தங்களது திருமண வாழ்க்கையைப் பிறரிடமிருந்து மறைக்கப் போராடும் இரண்டு மனிதர்கள் என்ற எளிமையான, அதேசமயம் சுவாரஸ்யமான கதைக்களத்தைக் கொண்டது ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர். பணியிடச் சூழல், ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதல்கள், தொடர்ந்து ஏற்படும் தவறான புரிதல்கள் என நகைச்சுவைக்கு ஏராளமான வாய்ப்புகள் இதில் உள்ளன. இந்தத் தொடரில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்றார்.

அப்துல் கபீஸ் இயக்கத்தில், ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ள ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர், ஜியோஹாட்ஸ்டாரின் லாங் ரன்னிங் ஷோஸ் வரிசையில் இணைகிறது. மொத்தம் 100 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடரில், ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோடுகள் வெளியாகும். அலுவலக நகைச்சுவை, காதல் மற்றும் கதாபாத்திரங்களின் மாறிவரும் உறவுகள் எனப் பல அம்சங்களுடன் வாரந்தோறும் பார்வையாளர்களுக்கு புதுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கவுள்ளது.

admin

admin

Related Posts

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!
News

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

by admin
November 6, 2026
News

by admin
November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!
News

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

by admin
November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
November 6, 2026
‘டெத் ரயில்வே’  : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!
News

‘டெத் ரயில்வே’ : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!

by admin
November 6, 2026

Recent News

November 6, 2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 6, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?