பிரேம்ஜிக்கு பொண்ணு வரம் கேட்டு ஆன்மீக சுற்றுலாவா?

“எவ்வளவோ பண்ணிட்டோம் .இத பண்ணமாட்டமா?” என்கிற ரேஞ்சுக்கு வந்திட்டாங்க போலிருக்கு வெங்கட் பிரபு அண்ட் பிரதர்ஸ்?

“மகாலட்சுமி மாதிரி பொண்டாட்டி வேணும் ” என்று தவமிருப்பவர் பிரேம்ஜி அமரன். காலண்டரில் இருக்கிற மகாலட்சுமி மாதிரியா ,அல்லது இவர் சைட் அடிச்சு தோல்வி அடைஞ்ச யாரோ ஒரு மகாலட்சுமி மாதிரியா? என்பது தெரியவில்லை. இன்னும் கல்யாணம் ஆகல. அதனால கோவில் கோவிலாக போய் பிரேம்ஜிக்காக கடவுள்களிடம் வேண்டுதல் வைக்கிறார்கள் போல தெரிகிறது! நல்லது நடக்கட்டும் பிரேம்ஜி.! 

கடந்த 5 மாதங்களாக கொரோனா காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு இருந்ததால்  திரையுலக பிரமுகர்களும்  படப்பிடிப்பு இல்லாமல்  வெளியூர், வெளிநாடு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

இந்நிலையில்,தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இ பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டு விட்டதால், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி உள்பட அவருடைய நண்பர்கள் வட்டாரம் தங்களது  முதல் பயணமாக திருவண்ணாமலை கோவிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்த பயணத்தில் நடிகர் கருணாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆன்மீக சுற்றுலாதிருவண்ணாமலைபிரேம்ஜி அமரன்வெங்கட்பிரபு.