காஜல் அடைந்த கட்டில் பரிசும் ,கணவனுக்கு கொடுத்த தொட்டில் பரிசும்.!

செவ்வாய்க்கிழமை …தமிழகத்தில் முருகனது ஆலயங்களில் வழிபாடுகள் சிறக்கும். அன்றுதான் அருகனுக்கு பிறந்த நாளாம் .

அந்த நன்னாளில்தான் வடபுலத்து நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகிய ஆண்  குழந்தை பிறந்திருக்கிறது. மும்பையில் அதிகாலை வரவு.

தாயும் சேயும் நலம். அவர்களது இனிய இல்லத்துக்கு புதிய வரவு.

இந்தியன் 2-விலிருந்து விலகி பத்து மாதங்களைக் கடந்து மடி மேல் பலன் கிடைத்து விட்டது. 

ஆனால் இந்தியன் 2 ,கிணற்றின்  கல்லாகவே கிடக்கிறது.  2020 -அக்டொபர் 30-ல் காஜல் மண  மாலை சூட்டிக்கொண்டார். கவுதம் கிச்சுலுவின் மனமொத்த வாழ்க்கைக்கு கட்டில் பரிசாக தன்னைக்கொடுத்துவிட்டு தற்போது தொட்டில் பரிசினை கணவனுக்கு கொடுத்து இருக்கிறார் , காஜல்.

“காதல் கணவரே ,நீங்கள் எத்தகைய உயர்வானவர் என்பதை கண்டு கொண்டேன்.” என கிச்சுலுவை மார்புடன் அணைத்துக்கொண்டு நீண்ட மடலினை எழுதியிருக்கிறார் காஜல்..

 

ஆண் மகவுகவுதம் கிச்சுலுகாஜல் அகர்வால்