ஏஆர் முருகதாஸின் ‘1947 ஆகஸ்ட் 16.’

மிகவும் வித்தியாசமான தலைப்பு. 
ஆர்வத்தை தூண்டுகிறது ‘1947 ஆகஸ்ட் 16.’என்கிற படத்தின் பெயர்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு மறுநாளில் நடந்த கலவரம் பற்றிய படமாக இருக்கலாமோ என்கிற எண்ணம் படத்தின் போஸ்டரைப் பார்த்த பிறகு வருகிறது.
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் .இந்தியத் திரை உலகம் நன்கறிந்த பெயர்.
முன்னணி நடிகர்களுடன் படம் பண்ணப்போகிறார் என்று யார் யாரோ பெயரெல்லாம்  அடிபட்ட பின்னர் வந்திருக்கிற தெளிவான அறிவிப்புதான் ‘1947 ஆகஸ்ட் 16.’
முக்கிய கேரக்டரில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார் ,அறிமுக இயக்குநர் பொன்குமார் இயக்குகிறார் .தயாரிப்பாளராக ஏஆர் முருகதாஸ்.

அறிமுக நாயகி ரேவதியுடன் கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படம், இந்திய சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தின் போது, ஒரு  கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் படமாக்கப்படும் இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது, தற்போது  இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இயக்குநர் என்.எஸ் .பொன்குமார் இந்த கதையைப் பற்றி என்ன சொல்கிறார்?
“இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது”என்கிறார்.

 

1947 ஆகஸ்ட் 16எஸ்பொன்குமார்ஏஆர் முருகதாஸ்கவுதம் கார்த்திக்டி ஒன் சேனல்