பா.ரஞ்சித் பாராட்டிய கல்லூரிப் படம்.!

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், , டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ .
கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும்  ,  அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடம் .
பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கமர்சியலான படமாகவும் இருக்கும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஜெய் அமர்சிங்.
இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.இரஞ்சித். 
காலேஜ் ரோடுஜெய் அமர்சிங்பா.ரஞ்சித்லிங்கேஷ்