
முதல்வர் விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட விவகாரத்தின் பிண்ணனியில் இருப்பது நடிகை திரிஷாதான் என்று பலரும் பரவலாக பேசி வரும் நிலையில், இது குறித்து திரிஷா தரப்பிலிருந்து தற்போது வரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை இந்நிலையில் விஜய்யுடன் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்தில் பங்கேற்றது முதல் லண்டனில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை காண்பதற்கு விஜய் சென்றபோதும் திரிஷா அவருடன்தான் சென்றிருந்தார். இது குறித்த வீடியவும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், முதல்வர் விஜய்யும், நடிகை திரிஷாவும் மீண்டும் ஜோடியாக சென்னையில் நடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் வீட்டு திருமணத்துக்கு ஒன்றாக சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது.
விஜய் கருப்பு நிற கோட்டும், திரிஷா பிங்க் நிற புடவையும் அணிந்திருந்தார்கள். மணமக்களோடு ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தங்கள் வாழ்த்தினையும் பகிர்ந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்












