Tuesday, November 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

admin by admin
November 10, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம் மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியுள்ளது விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில்..இயக்குநர் மு மாறன் பேசியதாவது,
“‘அப்பா குட்டி’ என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன. தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்கள் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன். இந்தக் கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது அனைவருக்கும் பிடித்திருந்தது. சில காரணங்களால் உடனடியாகப் படமாக்க முடியாமல் இருந்தது. பின்னர் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் கதையைச் சொன்னபோது அவர்களுக்கும் பிடித்துப்போனது. அப்போது இந்தக் கதையில் விஜய் ஆண்டனி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தேன்.

You might also like

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். ‘கன்டென்ட்தான் கிங்’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள். அப்படிப்பட்ட நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வைஜெயந்தி மேமுக்கு நன்றி. படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய செந்தில் சார், தனஞ்செயன் சார், சசி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நவம்பர் 28-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.”


நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,

‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார். அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். தமிழ் மொழி அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. இந்த வயதிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்திருக்கிறார். ஹரிப்ரியா பாடிய பாடலும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர் செந்தில், தனஞ்செயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் எனக்கு அளித்த அன்பையும் வரவேற்பையும் தொடர்ந்து வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் படமும் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன். ‘அப்பா குட்டி’ படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” இவ்வாறு அவர் பேசினார் 

 இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

admin

admin

Related Posts

ஜியோஹாட்ஸ்டாரின்  ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல்  வெளியாகிறது!
News

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

by admin
November 10, 2026
‘கிங் 100 :  ‘கர்ணா’  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
November 10, 2026
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!
News

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

by admin
November 9, 2026
சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’  !
News

சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’ !

by admin
November 9, 2026
மெடிக்கல் மாஃபியாவை எதிர்க்கும் லோகேஷ் கனகராஜின் ‘RX’.
News

மெடிக்கல் மாஃபியாவை எதிர்க்கும் லோகேஷ் கனகராஜின் ‘RX’.

by admin
November 9, 2026

Recent News

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

November 10, 2026
‘கிங் 100 :  ‘கர்ணா’  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

November 10, 2026
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

November 9, 2026
சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’  !

சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’ !

November 9, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?