தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில், ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமானார். சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் போதே மேயாத மான் பட வாய்ப்பு கிடைத்ததும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம், யானை, பத்து தல, மாஃபியா, மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, இந்தியன் 2, ரத்னம், இந்த ஆண்டு ரவிதேஜா நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற இருமுடி என ஏகப்பட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவே மாறினார்.சினிமாவில் நடிகையாக ஆவதற்கு முன்பே ராஜவேலு என்பவரை பிரியா பவானி சங்கர் காதலித்து வந்தார்.
அவ்வப்போது இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவுகளையும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். இருவரும் இவ்வாறுதான் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று,மருதாணி வைத்த கையுடன் நேற்றுடன் மெஹந்தி விழா நடைபெற்ற புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்திருந்தார் பிரியா பவானி சங்கர்.தொடர்ந்து இருவரும் கழுத்தில மாலையுடன் காட்சியளிக்கும் நிச்சயதார்த்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரியா பவானி சங்கரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரியா பவானி சங்கர், சத்தமே இல்லாமல் இன்று காலை ஈ சிஆ ரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ரகசியமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் . நடிகர் அசோக் செல்வ ன் கலந்து கொண்டார். இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் கழுத்தில் அவரின் நீண்ட நாள் காதலர் ராஜவேல் தாலி கட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.












