
காதில் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றியது போலிருந்தது அந்த சேதி செவியில் வீழ்ந்தபோது……!
மத்திய பிரதேசத்தில் இருக்கிறது சிவபுரி. சின்ன கிராமம் என்று சொல்ல முடியாத அளவுக்கு பிரபலமாகி இருக்கிற ஊர்.
இங்கு வாழ்கிற ஆண்களில் பெரும்பாலோர் அவர்களின் மனைவியரை வாடகைக்கு விடுகிறார்கள் .மணிக்கு 10 ரூபா.
மந்திரம் சொல்லி, அக்கினி வலம் வந்து ,அருந்ததி பார்த்து யாரும் முறைப்படி கல்யாணம் செய்து கொண்டவர்கள் அல்லர் என்பதுதான் வேதனை.,
பத்து ரூபா பத்திரத்தில் குத்தகைக்கு எடுத்து மனைவியாக்கிக் கொண்ட குல மகன்கள் அந்த பெண்களை மணிக்கு ,அல்லது நாள் கணக்கில் வாடகைக்கு விடுகிறார்கள். மாத வாடகைக்கும் மனைவிகளை அனுப்புகிறார்கள்.
குத்தகை முடிந்து விட்டால் வேறு ஒரு குலமகன் அவளை பத்திரப்பதிவு செய்து கொள்கிறான்..
மாநிலத்தை ஆள்கிற பாஜக அரசு இதுநாள் வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தெரியவில்லை !












