
சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமா ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தாலும் அரசியல் கட்சிக்கான வேலைகளிலும் கவனமாக இருக்கிறார்.
2.0 படம் வெளியாகும் கட்டத்தில் கட்சி பெயர் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள். இந்தப்படத்துப் பிறகு அவர் நடித்து வெளிவரப்போவதாக இரண்டு படங்கள்தான் இருக்கும்.அதன் பின்னர் படங்களில் நடிக்கப்போவதில்லை என்கிறார்கள்.
முன்னதாக அவரது ரசிகர் மன்றத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு அவர் அட்வைஸ் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. “தேர்தலில் போட்டியிடுவதற்காக யாரும் கட்சியை அணுகக்கூடாது.டிக்கெட் பெறுவதற்காக யாரையும் அணுகுவது லாபி பண்ணுவது கூடாது” என்று கண்டித்து கூறியிருக்கிறாராம். இதனால் கோபம் அடைந்திருக்கும் ரசிகர் மன்றத்தினரை சந்தித்துப் பேச விருக்கிறாராம் .எப்படியானால் என்ன கூட்டணி முடியும் வரை தானே இந்த கெடுபிடிஎல்லாம்!












