
நெருங்கி வந்தா கட்டி அணைத்து உம்மா கொடு! எட்டிப் போயி விறைப்பு காட்டினால் கழுத்தில் கத்தியை வை என்பது ஸ்ரீ ரெட்டியின் சித்தாந்தம் போல.
தெலுங்கு நடிகர்கள் மீது செமத்தியா செக்ஸ் புகார்களை அடுக்கி அசிங்கம் அசிங்கமாக திட்டினார். அது ஒரு கோர்ஸ் முடிந்ததும் கோலிவுட் பக்கமாக வந்து செக்ஸ் புகார்களை அடுக்கினார்.
“வாய்ப்பு தரேன் ,உன் நடிப்புத் திறமையை பொதுவான மனிதர்களிடம் காட்டு.திறமையா நடிக்கிறேன்னு அவர்கள் சொன்னால் அங்கேயே படத்துக்கான அட்வான்ஸ் தாரேன் ” என்று சொன்னதும் சுருட்டிக்கொண்டு ஓடி விட்டார் ஹைதராபாத்.
சிரங்கு வந்தவனால் சும்மா இருக்க முடியாது.சொரிந்து கொண்டே இருக்கனும் .அதைப்போல இது நாள் வரை அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி மறுபடியும் முன்னாள் முதல் எதிரி பவன் கல்யாண் மீது தாக்குதலை தொடங்கி விட்டார்.
புடவை அணிந்த படத்தை போட்டு இதுதான் பவனின் பிடித்தமான படம் என்று சொல்லி இருக்கிறார். நிறைய பெண்களுடன் இருக்கிற புகைப்படத்தைப் பிரசுரித்து “தெலுங்குப் பெண்களே ! இவரது ஆசைக்கு நாமா?” எனக் கேட்டிருக்கிறார்.
இதுமட்டுமல்ல ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவரை ‘அண்ணா’ என அழைத்து பவனின் கட்சிக்காரர்களை வெறுப்பேற்றி இருக்கிறார். இதனால் இரண்டு கட்சியினரும் மோதிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள்.












