
படங்களில் நடித்து வந்த புகழை விட பிக்பாஸ் ரியால்ட்டி ஷோ வழியாக வந்த பெருமைதான் ரைசாவை அடையாளம் காட்டியது,
பெங்களூரு பொண்ணு. மாடல்,சினிமா என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அல்ட்ரா மாடர்ன் .
பிக்பாசில் அப்பா கமல்ஹாசன் கேள்வி கேட்டார்.சன் டிவி நிகழ்ச்சியில் மகள் ஸ்ருதிஹாசன் வாயைப் பிடுங்கினார்.
சிரித்துக் கொண்டே ஸ்ருதி ஜாலியாக கேட்ட கேள்விகளுக்கு ரைசா யதார்த்தமாக சொன்ன பதில்கள் பலருக்கு பதார்த்தமாகிவிட்டது.
வாயில் போட்டு மென்று கொண்டிருக்கிறார்கள்.
“நீங்கள் டீ டோட்டலரா?” என்பது ஸ்ருதியின் கேள்வி. அதாவது சரக்கு அடிக்காத ஆளா? இதற்கு சர்வ சாதாரணமாக வருகிறது பதில்.
“இல்ல!”
அட ங்கொக்க மக்கா! இவ்வளவு தைரியமாக பதில் சொல்கிற பெண்ணிடம் அடுத்து என்ன கேட்கலாம்!
“நீங்க ஆண்களுடன் ‘Flirt’ ஆக இருப்பிங்களா?” அதாவது உல்லாசமாக இருப்பவரா?
“ஆமா! மாடலாக இருப்பதால் வெளியூர்களுக்கு படப்பிடிப்புகளுக்கு செல்லவேண்டியதாக இருக்கும்.”என்கிற பதிலை சொன்னார்.












