
கூதிர் விழா-நல்ல
குளிர்காலப்பொன் விழா
கொட்டடா கொட்டடா முரசம்
வீதிக்கு வீதி பல
வீட்டுப்புலித் தமிழர்
வில்லேந்தி வந்தனர் வாழ்க!
சூதற்ற தமிழ் மாதர்.
சோலைப்பசுங்கிளிகள்
சுடர் விளக்கேந்தினர் வாழ்க!
அறிவென்று சொல்லடா தமிழை!
நமதென்று நாட்டடா
நந்தமிழ்ப் பொன்னாடு!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.












