
எட்டிக்காயை விட கசப்பது அட்வைஸ். தேனை விட இனிப்பது இளம்பெண்ணின் கிஸ்.
இதுதான் இன்றைய இளையதலைமுறையின் அணுகுமுறையாக இருக்கிறது.
தேர்வு எழுதச்செல்லும் ஒரு இளைஞன் அவனது பேனாவை பிரியமானவளிடம் கொடுத்து அதற்கு முத்தம் கொடுக்கச் செய்து வாங்கிக் கொண்டு போனான்.
கேள்வித்தாள் எப்படி இருந்ததோ?
குடும்பத்தின் மூத்த அண்ணன் நிலையில் இருந்து சிவகார்த்திகேயன் மாணவ மாணவியர்க்கு கோரிக்கை வைத்திருக்கிறார், அல்லது அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அது அவசியமானது.!
“அன்புள்ள சகோதர,சகோதரிகளே!
இது உங்களில் பலருக்கு பைனல் எக்ஸாம்.
உங்களின் பொன்னான நேரத்தை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.
தேவையான அளவு தூக்கம்.உடல் நலம் முக்கியம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.!
ஜெயிப்பீர்கள்”!
அறிவார்ந்த ஆலோசனையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.












