
உலகப் புகழ் பெற்ற ஆலயங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் ஒன்று,
தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு அவ்வப்போது இலக்கு ஆகும் ஆலயம்.
இந்த ஆலயத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்த உத்திரவு.
ஆனால் பெரிய இடங்களை காவல் துறை கண்டு கொள்வதில்லை போலும்!.
அதைப்போல நடிக நடிகையரையும் கண்டு கொள்வதில்லை.
நடிகை நிவேதா பெத்துராஜ் அண்மையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
அங்கு இஷ்டத்துக்கு செல்போனில் படங்கள் எடுத்திருக்கிறார். அதில் சில அவரது சோசியல் மீடியாவில் வெளி ஆகி இருக்கிறது.
தடை உத்திரவு இருக்கும்போது இவர் மட்டும் எப்படி செல் போனை கோவிலுக்குள் கொண்டு செல்ல முடிந்தது, படங்களை வெளியிட காரணம் என்ன என்கிற கேள்வி எழாமல் இருக்குமா?
காவல்துறை இவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது?












