
மக்களுக்காக படம் எடுப்பவர்களில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ,சற்றே வித்தியாசமானவர். துணிவாக கருத்துகளை சொல்லிவிடுவார். சிவப்பு சிந்தனையாளர் என்று சொல்லலாம்.ஹோசிமின்னை நினைவுபடுத்து தாடியும் தோற்றமும்.!
இவர் மக்கள் செல்வன் விஜயசேதுபதி,ஸ்ருதிஹாசனை வைத்து “லாபம்” என்கிற இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. முதன் முதலாக கடையில் கணக்குத் தொடங்குகிறவர்கள் சிட்டையில் லாபம் என மஞ்சளில் எழுதுவது வழக்கம். அது இன்று இருக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்தப் பெயரில் இரண்டு ஆற்றுப் படுகைகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
முதலில் தாமிரபரணி ஆற்றுப்படுகை நீர்ப்பிடிப்பு பகுதி, பின்னர் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதி.
அதிரடி ஆக்ஷனும் அற்புதமான கதையும் கொண்ட இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடகி.விஜய்சேதுபதி கேரக்டர் சஸ்பென்ஸ்.ஜெகபதிபாபுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்றுதான் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது












