
நடிகைகளில் துணிந்து கருத்துகளை சொல்கிறவர் கஸ்தூரி.
எதிர்வினைகள் எப்படி வந்தாலும் அதை நேர்கொள்கிற துணிச்சல் மிகுந்தவர். இவரை கருத்து கஸ்தூரி எனவும் சொல்லலாம்.
இயக்குநர் சலங்கை துரை இயக்கியிருக்கிற “இ,பி.கோ.302 ” என்கிற படத்தில் ஏசிபி.துர்காவாக நடித்திருக்கிறார்.
இவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது.
அடுத்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினி போட்டியிடுகிறாரோ இல்லையோ கஸ்தூரி கண்டிப்பாக போட்டியிடுவார் என சொல்லலாம். எந்த கட்சியின் சார்பில் என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
ஒருவேளை நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தாலும் சேரலாம்.!
இ.பி.கோ.302 வைப் பற்றி பார்க்கலாம்.
சலங்கை துரை என்ன சொல்கிறார்?
| “கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள்.
முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது… செத்தவன் யார் என்றும் தெரியவில்லை..கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள்…வெளியே போனால் ஜாதிக் கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை. இன்னொரு படு கொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ் தான் கஸ்துரி. ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு…நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது. இந்த படம் நடந்து கொண்டிருக்கும் போதே புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து “எதிர்வினை” என்கிற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதையும் இதே செளத் இந்தியன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்களும் நிறைவான படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது “என்கிறார் இயக்குனர் சலங்கைதுரை. |












