
நாளை படம் ரிலீஸ் ஆகிறது என்றால் இன்று கமிஷனர் ஆபிசில் “அந்த கதை என்னுடையது”என்கிற புகாருடன் வந்து நிற்கிற காலம் இது.!
அதைப்போல தன்னைஇயக்குநர் பார்த்தீபனும் அவரது ஆட்களும் நுங்கம்பாக்கம் போர் பிரேம்ஸ் தியேட்டரின் மூணாவது மாடியில் வைத்து அடித்து உதைத்து கீழே தள்ளி கொலை செய்ய முன்றனர் என போலீசில் புகார் செய்திருக்கிறார் ஜெயம் கொண்டான் என்பவர்.
இவர் தன்னை கவிஞர் என்றும் உதவி இயக்குநர் என்பதாகவும் கூறிக்கொள்கிறார். கவிஞர் கிச்சன் வைத்து நடத்தியதாகவும் சொல்கிறார்.
இதற்கு பார்த்தீபன் பதில்:
“பார்த்திபன் கொலை செய்ய முயற்சி’ Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி!”
புகாரில் கூறப்பட்டுள்ள போர் பிரேம்ஸ் தியேட்டர் கைமாறி வெகு காலமாகி விட்டது .அந்த தியேட்டர் லெ மாஜிக் லேண்டர்ன் என்கிற பெயரில் நடக்கிறது. முன்னாள் நடிகை லிசி யின் பொறுப்பில் இருக்கிறது.












