
“இம் என்றால் சிறைவாசம்,ஏன் என்றால் வனவாசம்” என ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவன் முண்டாசுக் கவிஞன் பாரதி.
இன்று தேர்தல் கால ஒழுக்கம் என சொல்லி வேண்டியவர்களுக்கு ஒரு விதமாகவும் வேண்டாதவர்களுக்கு வேறு விதமாகவும் அரசும் நிர்வாகமும் நடந்து கொள்கின்றன. இதற்கு நடுநிலை எனப் பெயர்.உருத்திராட்சப் பூனைகள்.!
“காந்தியை சுட்டவன் நாதுராம் கோட்சே.சுதந்திர இந்தியாவில் அவன் முதல் இந்து .தீவிரவாதி”என சொன்னதற்காக கமல்ஹாசனை பாஜகவினரும் அந்த கட்சியின் ஆதரவாளர்களும் வாட்டி வறுத்து எடுத்து விட்டார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவரை கைது செய்யும்படி வற்புறுத்தி வருகிறார்கள்.அனேகமாக நான்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்குப் பிறகு கைதுப் படலம் இருக்கலாம் என்கிறார்கள். கமலும் முன்ஜாமீன் வாங்கி வைத்திருக்கிறார்.
விஸ்வரூபம் படம் ரிலீஸ் நேரத்தில் அன்றைய முதல்வர் ஜெ.நடவடிக்கையினால் படத்துக்கு தனி பப்ளிசிட்டி கிடைத்தது. அதைப்போல மக்கள் நீதி மய்யத்துக்கும் பப்ளிசிட்டி.
கமலின் ராஜதந்திர நடவடிக்கையினால் அவரது கட்சிக்கு அறுவடைக்காலம் வரவிருக்கிற சட்டமன்ற பொதுத்தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்குத்தான் என்பது பொதுவான கருத்து. இந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாங்கும் சதவீதம்தான் கட்சியின் எதிர்காலத்தை முடிவு செய்யும் .












