
எல்லை கடந்து வந்து பயங்கரவாதத்தை கடத்துகிறது பாகிஸ்தான்.
வீணாக வம்பு சண்டைக்கு வருவதாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் நிலையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்திருக்கிறது.
அது என்ன விசித்திரம்?
காதல் விசித்திரம்!
அஞ்சலி சக்தா . இந்தியப் பெண்.
சுந்தாஸ் மாலிக் . பாகிஸ்தான் பெண்.
இருவரும் லெஸ்பியன்ஸ்!
காதல் வானில் சிறகடித்துப் பறக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.
“மனிதக் காதலையும் தாண்டிய புனிதமானது ,புனிதமானது ‘ என்று நியூ யார்க்கில் உல்லாசமாக வலம் வருகிறார்கள்.
கட்டிப்பிடிக்கிறார்கள், கனி வாய் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.












