
மரண அடி வாங்கிய படத்துக்கு ,வெளியான மறுநாளே சக்சஸ் பார்ட்டி நடத்துகிற காலம் .அப்படி அடிவாங்கிய ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா என்கிற படத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் ஒரு சக்சஸ் பார்ட்டி நடத்தினார்.
அந்த பார்ட்டிக்கு சைலேஷ் கபூர் என்கிற ஒரு தயாரிப்பாளர் மட்டுமே வந்தார். மற்றொரு தயாரிப்பாளரான ஏக்தா கபூர் வரவில்லை புறக்கணித்து விட்டார்..
காரணம் இருவருக்கும் சண்டை.!
அந்த படத்துக்கு கங்கனாவும் ஒரு தயாரிப்பாளர்தான். படத்தின் புரமோஷன் வேலைகளில் கங்கனா ஈடுபடவில்லை.அதனால் ஏக்தாவுக்கு கோபம் என்கிறார்கள்.
கங்கனாவின் புதிய படத்தைத் தான் இங்கு பார்க்கிறீர்கள்.












