
விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நெற்றிக்கண்.
தலைப்பு என்னவோ ரஜினி படத்தினுடையது என்றாலும் கதை கொரியன் படமான ‘பிளைன்ட் ‘என்பதின் பிரதியாகும்.
இதில் நயன்தாரா பார்வை இல்லாத பெண்ணாக நடிக்கிறார். அதை படத்தின் போஸ்டரில் பிரைலி எழுத்து வழியாக காட்டியிருக்கிறார்கள்.
பார்வை இல்லாத பெண்ணாக இருந்தாலும் மிகவும் கூர்மையான புத்தி. ஒரு பயங்கரமான கொலையின் ஆணிவேர் யார் என்பதை கண்டுபிடிக்கிற அளவுக்கு புத்திசாலி.












