
கோடீஸ்வரன் ஆகலாம் நிகழ்ச்சி.
கோன் பனேகா குரோர்பதி. இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தும் குவிஸ் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் சத்ருகன் சின்காவின் மகள் சொனாக்ஷி கலந்து கொண்டு அனுமான் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் முழித்த கதையை முன்பே சொல்லியிருந்தோம்.
பல்லாயிரக்கணக்கில் ட்ரோல் பண்ணியிருக்கிறார்கள்.
அமிதாப்பும் தன் பங்குக்கு “என்னம்மா உங்கப்பாவின் வீட்டுக்குப் பேர் ராமயாணா.சித்தப்பா பேர் லட்சுமணன் ,உங்கப்பவின் பேர் சத்ருகன். தம்பிகளின் பேர் லவ குசா.இந்த கேள்விக்கு பதில் தெரியலியே! “என்றதும் சொனாக்ஷி “சார் எனக்கு பிதகோரஸ் தியரம் என்ன என்பதே தெரியாது .மற்றும் முகலாய மன்னர்களைப் பற்றியும் தெரியாது” என்று தனது படிப்பறிவு பற்றி சொல்லிவிட்டார்.












