
இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவின் மூன்று விதமான காலகட்டங்களை இப்படம் பேச உள்ளதாம்.
இதில் எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த் சாமி.நடிக்கிறார் .
திரையுலக வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் எம்ஜிஆரின் நிழல் என அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி நடிக்கிறார் என்கிறார்கள். ஆர்.எம்.வீ சற்று குள்ளம். சமுத்திரக்கனியோ நல்ல உயரம்.எப்படி பொருந்தும்? தெரியவில்லை.
சசிகலா,கருணாநிதி மற்றும் சிவாஜிகணேசன் கதாபாத்திரங்களுக்கும் நடிகர்களை தேர்வு செய்யும் வேலை நடக்கிறது..
இப்படத்துக்காக 1970 களை நினைவு படுத்தும் வகையில் ஒரு பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உருவாக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அரவிந்த் சாமி நவம்பர் 15-ஆம் தேதி படக்குழுவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.












