
இன்னமும் கட் சி தொடங்கப்படவில்லை. ஆனால் அகில இந்திய அளவில் ரஜினியும் அரசியல் தலைவராகி விட்டார்.
தமிழக அரசியலில் கமலும் ரஜினியும் இணைவார்கள் என்கிற கருத்து அவர்களாலேயே உறுதி செய்யப்படட பிறகு தமிழ் நாட்டில் என்னென்ன நடக்கலாம் என்பதை வட இந்தியர்கள் கணிக்க -கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். முக்கியமாக பாஜகவின் அரசியல் மூளை குழம்பிப் போய் இருக்கிறது.
ரஜினியை நம்பி காய் நகர்த்தியவர்கள் தற்போது எப்படி கமல்-ரஜினியை பிரித்து ஆளலாம் என சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆளும் கட் சியான அதிமுக அதிர்ந்து போய் இருக்கிறது.இவர்களது பண பலம்,அடியாள் பலம் அதிகார பலம் ஆகிய மும்முனை தாக்குதலை முறியடிக்கும் வல்லமை ரஜினி ரசிகர்களுக்கு இருக்கிறது. இவர்களுடன் கமல் ரசிகர்களும் இணைந்து விட்டால் சொல்லத் தேவையில்லை.
இதனால் ஆளும் கட்சியினர் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இன்று மாலை கோவாவில் இருந்து சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினியை விமான நிலையத்தில் கேள்வி கேட்டார்கள்.
அதன் விவரம்.
கேள்வி : நீங்களும் கமலும் இணைந்தால் யார் முதல்வர்னு கேள்வி வருதே?
ரஜினி: தேர்தல் நேரத்துல அப்ப நடக்கிற சூழ்நிலையில், அது நான் கட்சி ஆரம்பிச்சுட்டு, அதை என் கட்சியினரிடம் கலந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு,அது வரைக்கும் அந்த விஷயத்தை பத்தி பேச விரும்பல.
கேள்வி: நீங்களும் கமலும் இணையிறதை பத்தி அதிமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்களே?மேலும் இது திராவிட பூமி. இங்கு ஆன்மிக அரசியலுக்கெல்லாம் இடமே இல்லை என்கிறார்களே?
ரஜினி: 2021 -ல் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தை,அற்புதத்தை, நூத்துக்குநூறு சதவீதம் நிகழ்த்துவார்கள்.












