
தமிழ்ச் சினிமாவின் மெகா ஸ்டாராக சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினிகாந்த்.
தற்போது ஒரு படத்திற்கு இவர் 100 கோடி சம்பளமாக வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில்பேசப்பட்டு வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்கம்டாக்ஸ் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.கொடுத்தவரும் வாங்குபவரும் வாய் திறவாத அரிச்சந்திரன்கள் !
ஏற்கனவே தன்னுடைய இரண்டு மகள்களுக்கு நிறைய சொத்துகளை கொடுத்துள்ள ரஜினி தன்னுடைய பேரப் பிள்ளைகள்களுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டு செய்தும் முடித்துள்ளாராம்.
ஐஸ்வர்யா தனுஷின் இரண்டு மகன்கள் மற்றும் சௌந்தர்யாவின் ஒரு மகன் என மூவரின் பேரிலும் பேங்கில் ரூ 25 கோடி பிக்சட் டெபாசிட் செய்துள்ளாராம்.
இவர்கள் மூவருக்கும் 28 வயதாகும் போது இந்த தொகை ரூ 90 கோடியாக திரும்ப கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதனை கேட்ட நெட்டிசன்கள் ம்ம்ம்… கொடுத்து வச்ச பேரப் பிள்ளைங்க என பெருமூச்சு விடுகின்றனர். ஏம்பா இருக்கிற மவராசன் கொடுக்கிறார் .நீங்க ஏன் வயித்தில ஹோமம் வளர்க்கிறீங்க?












