நடிகர் ரஜினிகாந்தை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார் இச்சந்திப்பு போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் நடந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஷ்வரன் கேட்டறிந்தார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழர்கள் பிரச்சனை, திரைப்பயணம் குறித்தும் பேசியதாகவும் தெரிகிறது. இறுதியில் ரஜினியுடன் விடைபெறும் போது ,இலங்கை வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.












