
நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்கு வாங்கிய கடனை இன்னமும் செட்டில் செய்யவில்லையாம்.
கடன் கொடுத்த அரசு பிலிம்ஸ் இது தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
இதனால் அறியப்படுவது யாதெனில் விமல் நடித்து இந்தப்படம் வெளிவந்தாலும் அந்த படம் வில்லங்கத்தை சந்திக்க வேண்டியது வரும் என்பதே.!
நடித்தோம் காசை வாங்கி வங்கியில் சேர்த்தோம் என்பதில்லாமல் யாரோ சிலர் காட்டிய ஆசையில் படம் எடுத்தால் இப்படி நிம்மதியில்லாமல் வாழ வேண்டியதிருக்கும் என்பதற்கு எத்தனையோ பேர் உதாரணமாக இருந்தாலும் ,,,விமல் என்ன அறியாப்பிள்ளையா ?













