எப்பவோ கவுண்டமணி-செந்தில் விளையாடி விட்டு போன டிக்கிலோனா காமடி ஒரு படத்துக்கு தலைப்பாகவே மாறிவிட்டது.
இந்த டிக்கிலோனாவை கண்டு பிடித்த இயக்குநர் குழுவினருக்கு சந்தானம் படக் குழுவினர் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள். ‘டிக்கிலோனா பெயரில் ஒரு படம் .
நடிகர் சந்தானத்தோடு இந்தியகிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா, ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். பம்பை தலையாலேயே பல காமடியன்களை முடக்கிவிட்ட எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்ஸாண்டர் ஒரு வேடமேற்க திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார்.
கார்த்திக் யோகி இயக்குகிறார்.. இசை அமைப்பாளார் யுவன் சங்கர் ராஜா
மிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.
வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.