
தளபதி விஜய் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.
தெலுங்கு விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ படத்திலும் இவர்தான் ஹீரோயின்.!
ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ஹீரோ படத்துக்கு திடீரென சிக்கல். எப்போது வெளிவரும் என்பது தெரியவில்லை.தளபதி விஜய்யின் படத்துடன் விஜய் தேவரகொண்டாவின் படமும் ஆந்திராவில் சேர்ந்து வெளிவரலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் விஜய் யை விட விஜய் தேவரகொண்டாவுக்குதான் ஆந்திராவில் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இது இயல்புதான்.லோக்கல் ஹீரோவுக்குத்தான் முதல் உரிமை .நமது தமிழ்நாட்டிலும் அப்படி தானே நடக்கும்!
ஹீரோ படம் வெளியாவதில் சிக்கல் என்பதால் மாளவிகா மோகனனுக்கு மனவருத்தம்.
“நான் ஹீரோவை மிகவும் எதிர்பார்த்தேன். ஏமாற்றமாக இருக்கிறது.அந்த படம் வந்தால் எனக்கு டர்னிங் பாயிண்டாக இருக்கும்.பரவாயில்லை .சரியான படத்துக்காக காத்திருக்கிறேன் “என்கிறார் மாளவிகா.












