
‘தலைவி’நடிகை கங்கனா மிகவும் துணிச்சலானவர்.
எப்பேர்ப்பட்ட ஆள் ஹிருத்திக் ரோஷன். அவரையே ஆட்டி வைத்து அலற விடவில்லையா!
எந்த அளவுக்கு துணிச்சல் இருக்கிறதோ அதே அளவுக்கு உண்மையை உடைத்து சொல்லிவிடுவார்.
கொரானா வைரஸ் ஊரடங்கு பற்றி என்ன சொல்கிறார்?
“இது ஒன்றும் கெட்ட நேரம் இல்ல. ஏன் அப்படி நினைக்கிறீங்க? எனக்கு 15 அல்லது 16 வயசு இருக்கும். வீட்டை விட்டு ஓடிப்போயிட்டேன்.அந்த நேரத்தில நான் போதைக்கு அடிமையா இருந்தேன் .இரண்டு வருஷம் அந்த கெட்ட பழக்கம் இருந்தது. என்னை இரண்டு வருஷம் ஆட்டிப் படைச்சிருச்சி.ஆன்மீக வழிதான் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. நேரத்தை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”என்கிறார்.
கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கத்தான் செய்யும்!












