
- “மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.
- வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்
- வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்”
என்கிற பாடல் வரிகளை கவியரசு கண்ணதாசன் எழுதி சென்றுவிட்டார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த வரிகள் யாருக்கும் பொருந்திப்போகவில்லை.
கொரானா என்கிற கொடிய கொள்ளை நோய்தான் அந்த தெய்வீக மனிதனை கவியரசின் வரிகளில் அமர வைத்திருக்கிறது இந்திய அளவில்.!
இந்தியாவின் உயர்ந்த மனிதன் வேறு யாருமல்ல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.
கோடிகளில் சம்பளம் வாங்கி வெள்ளையும் கருப்புமாக கணக்கு வைத்துக் கொண்டிருக்கிற மனிதர்களில் மாறுபட்ட மனிதனாக நிற்கிறார் அமிதாப்.
இந்தியாவில் வாழ்கிற ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு (எல்லா திரை உலக தினக்கூலியாக உழைக்கிற தொழிலாளர்க்கு) ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்திருக்கிறார்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் ,சோனி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமிதாப்புடன் இந்த அறக்கொடையில் இணைந்திருக்கின்றன.
டிஜிட்டல் கார்டுகள் வழங்கப்பெறும் அத்தனை தொழிலாளர்க்கும் அரிசி கோதுமை,பருப்பு உள்ளிட்ட பலசரக்கு பொருட்கள் வழங்கப்படும்.












