
அக்கினேனி குடும்பத்து மருமகள் சமந்தா .
தெலுங்கு அப்பா ,மலையாளத்து அம்மா கேரளத்தில் பிறந்தவர்.என்றாலும் வளர்ந்தது சென்னை பல்லாவரத்தில்தான்.
படித்தது ஹோலி ஏஞ்சல்ஸ்,ஸ்டெல்லா மேரிஸ். தன்னை தமிழ்ப் பெண் என்று கூறிக் கொண் டவருக்கு தொடக்கத்தில் சில ஒவ்வாமை குறைபாடுகள் இருந்தன.தமிழ் தெலுங்கு ஆகிய திரைப்படங்களில்நடித்து வந்த இவர் 2010 -ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலிக்கத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 7ஆண்டு காதல்.ஆந்திராவின் பிரபல அக்கினேனி குடும்பத்து மருமகள் ஆனார்.
கோவாவில் முதல் நாள் இந்து முறைப்படியும் மறுநாள் கிறிஸ்தவ முறைப்படியும் கல்யாணம் நடந்தது,
இன்று 28 ஆம் தேதி சமந்தாவின் பிறந்தநாள். ( 28 ஆம் தேதி 1987 ) ஊரடங்கு இல்லையென்றால் நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் விழாவை கொண்டாடி இருப்பார்கள் .இதனால் வீட்டிலேயே கொண்டாடி விட்டார்.
இதில் மிகச்சிறந்த சிறப்பு என்னவென்றால் பிறந்த நாள் கேக்கை செய்தவர் கணவர் நாக சைதன்யா.
அந்த கேக்கை டைனிங் டேபிளில் வைத்து பக்தி பெருக்குடன் வணங்குகிறார் சமந்தா.
இதற்கு என்ன அர்த்தம்? சீக்கிரமே குழந்தை வரம் கொடுப்பா சைதன்ய மகா பிரபு என்பதாக இருக்குமோ!












