
ஆடி ,ஓடி சுறுசுறுப்பாக இருந்தவர்களை ஒரு இடத்தில் இருக்கச்சொன்னால் அது கட்டிப்போட்டது போலாகி விடும்.இதனால் பிள்ளைகளுடன் எதையாவது வம்பிழுத்து அதை வீடியோவாக பதிவு செய்து வைரல் ஆக்குவது சினிமாக்காரர்களுக்கு தற்போதைய பொழுது போக்காகிவிட்டது.
தெலுங்குப்பட உலக முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவுக்கு கவுதம் ,சித்ரா என இரு பிள்ளைகள்.
கவுதமுக்கு வயது 13.
ஓரளவு வளர்ந்திருக்கிறான் .அவனிடம் மகேஷ்பாபு சென்று “நம்மிருவரில் யார் உயரம் என்பதை பார்க்கலாமா ? வா ” என்று அழைக்க ,அவனோ “நீங்கள்தான்பா உயரம் .என்னை விட்டு விடுங்கள் “என பதுங்கும் வீடியோவை மகேஷ் பாபு வெளியிட்டிருக்கிறார். வாரிசை களம் இறக்கும் ஐடியா இருக்குமோ.? இவரும் நடிகர் கிருஷ்ணாவின் பிள்ளைதான்.! சினிமாவை விட்டா வேறு எந்த தொழிலில் பணத்தை வாரிக் குவிக்க முடியும்?












