

கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை தீவிர ஊடரங்கு அமலில் உள்ளது.
,நடிகர் அஜித் கொரோனாவுக்கு எதிராக களமிறங்கியிருக்கிறார்
‘தக் ஷா’ அணியினருடன் டிரோன்கள் மூலம் சிவப்பு மண்டலங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அவர் தொடங்கியுள்ளார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.
அஜித்தின் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழுவினர் அமைத்த ட்ரோன், இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது என்பதும் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘தக் ஷா’ குழுவினர் உருவாக்கிய ட்ரோன் மூலம் தமிழகம் முழுவதும் குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள சிகப்பு மண்டல நகரங்களில் கிருமிநாசினியை தெளிக்கலாம் என்று அஜித் ஐடியா கொடுத்ததாகவும், இந்த ட்ரோன் வெறும் அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமி நாசினியை தெளித்துவிடும் தன்மை கொண்டது என்று அஜித் கூறியதாகவும் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை ஒழிக்கும் பணியில் அஜித் ஈடுபட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.












