
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மக்கள் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் பலருக்கும் அதிக மின் கட்டணம் வந்திருப்பது மக்கள் மனதில் கொந்தளிப்பையும், சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது.
நூறு நாளுக்கும் மேலாக பலரும் தங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதால், அவர்களுக்கு கரன்ட் பில் அதிகரித்து இருப்பதாக, (யூனிட்டுகளை மொத்தமாக கணக்கிடுவதால் தான்) மின் வாரியம் சமாளித்து இருந்தது.
பொதுமக்களின் புலம்பல் எதுவும் எடுபடாத நிலையில், நடிகர் பிரசன்னா, நடிகைகள் கார்த்திகா நாயர், ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்டோர் தங்களுக்கும் மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாக தங்களின் கரன்ட் பில்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இதில், ஏதோ முறைகேடு நடக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார்கள்..
அதிகப்படியாக நடிகை கார்த்திகா நாயருக்கு ஒரு லட்சம் பில் வந்திருப்பது அவரது குடும்பத்தையே அதிர்ச்சியடைய செய்தது.
தொடர்ந்து நடிகை ஷ்ரத்தா தாஸும் மும்பையில் தனது வீட்டு கரன்ட் பில் 26 ஆயிரம் ரூபாய் வந்திருப்பதாகவும், அதானி நிறுவனம் தான் இதற்கு காரணம் என்றும் கடுமையாக டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
நடிகை டாப்ஸி தன் வீட்டு ஜூன் மாத கரன்ட் பில் ரூ. 36 ஆயிரம் என வந்திருப்பதை பார்த்து ஷாக் ஆன அவர், அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு, இது எந்த மாதிரியான ஊழல் என்று தனது கடுமையாக கோபத்தை ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
டாப்ஸியின் பதிவுக்கு கீழே பல நெட்டிசன்களும் தங்களுக்கும் இதே நிலைமை தான் என கூறி வருகின்றனர்.டாப்ஸியின் பதிவு வைரலாகி வருகிறது.இந்நிலையில் நடிகை ஹூமா குரேஸி, தனது டுவிட்டரில், ‘இது என்ன புது மின் கட்டணம்? கடந்த மாதம் ரூ.6 ஆயிரம் கட்டினேன். இப்போது 50 ஆயிரமா? எப்படி வந்தது இந்த கட்டண உயர்வு? எங்களுக்கு விளக்குங்கள்’ எனக்கேட்டு அதானி மின் குழுமத்துக்கு டேக் செய்துள்ளார்.












