
பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு பிறகு பாலிவுட்டில் நடக்கும் ‘நெபோடிசம்'(வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்) பற்றிய பேச்சு பரவலாகி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இது பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.
பிரபல வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தளப் பக்கங்களுக்குச் சரமாரியாக, கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால் சத்ருகன் சின்ஹாவின் மகள் நடிகை சோனாக்ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து விலகினர்.
இந்நிலையில், தென்னிந்திய படங்களில் நடித்துவிட்டு பாலிவுட் சினிமாவுக்கு சென்ற நடிகை டாப்சியும் நெபோடிசத்தால் சில பட வாய்ப்புகளை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.இது குறித்து நடிகை டாப்ஸி கூறியுள்ளதாவது,
‘சினிமாவில் இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து வரும்போது, தொடர்புகள் அதிகம் இருக்கும். அதனால் வாய்ப்புகள் பெறுவதில் சிக்கல் இருக்காது. வெளியில் இருந்து வந்தால், தொடர்புகளை உருவாக்குவதற்கும் ஆட்களை அறிந்து கொள்வதற்கும் நாட்கள் ஆகும். இயக்குனர்களும் யாரோ ஒருவரை நடிக்க வைப்பதற்கு பதில் தங்களுக்குத் தெரிந்தவர்களை நடிக்க வைக்கவே விரும்புகிறார்கள்.இந்த நெபோடிசம் காரணமாக சில படங்களை இழந்திருக்கிறேன். இது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன்.
அதனால் அப்படி நடந்தபோது வேதனை அடைந்தேன். இதற்கு ரசிகர்களையும் குறை சொல்வேன். நட்சத்திர குடும்பத்தில் இருந்து ஒருவர் அறிமுகமாகும்போது ஆர்வமாக செல்லும் அவர்கள், சினிமா குடும்பத்தில் இல்லாதவர்கள் நடித்தால், பார்க்க மறுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.












